இலங்கைக்கு 6750 கோடி ரூபாய் கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலை தொடர்ந்து இலங்கை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கை உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்காக இந்தியாவிடம் சுமார் 7500 கோடி கடனாக கேட்டிருந்தது. ஆனால் இதற்கான ஆவணங்களை தயாரிக்க அதிக காலம் பிடிக்கும் என்பதால் சுமார் 6750 கோடி மட்டும் அவசர உதவியாக கேட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியா 500 கோடி ரூபாயை கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இலங்கைக்கு வழங்கியுள்ளது. தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சே வரும் பத்தாம் தேதி இந்தியா வர உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா இந்த மாதம் சுமார் 6750 கோடியை இலங்கைக்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.