Categories
உலகசெய்திகள்

இலங்கைக்கு இந்தியா தாராளம்…. கடன் உதவி செய்ய இந்தியா பரிசீலனை…!!!!!!!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் சுமையில் சிக்கி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. உலகளாவிய நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம்   அவசர நிதி உதவி அளித்து உதவுமாறு இலங்கை கோரியுள்ளது.

இந்நிலையில் பன்னாட்டு நிதியத்தின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் வாங்க இலங்கைக்கு மேலும் ரூ.3,750 கோடி கடனை இந்தியா வழங்க இருக்கிறது. இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே ரூ.1,500 கோடி நிதி உதவிகளை அறிவித்து எரிபொருள், உணவுப்பொருட்களை அனுப்பியது. அந்நாடு செலுத்தவேண்டிய ரூ.3000 கோடி கடனுக்காக அவகாசத்தையும் நீட்டித்துள்ளது. மேலும் 7,500 கோடிக்கான  கடன் உதவி செய்யவும்  இந்தியா பரிசீலிக்கிறதாம்.

Categories

Tech |