முன்னாள் அதிபர் விரைவில் நாடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார்.
இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோத்தப்பய ராஜபக்சே விரைவில் தாய் நாட்டிற்கு திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் சொந்த நாட்டிற்கு திரும்பியதும் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரிடும் எனவும், கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவத்தினர் மூலம் இணைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.