துருக்கி நாட்டில் டிரோன்களில் பொருத்தும் சிறிய வகை ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்கின்றனர்.
துருக்கி நாட்டில் டிரோன்களில் பொருத்தும் சிறிய வகை ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்க தொடங்கியுள்ளது. மேலும் துருக்கி பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள துபிதாப் எனப்படும் போசோக் லேசர் ஏவுகணை வழிகாட்டியை கொண்டு இயக்குவதுடன், அருகில் உள்ளவற்றை உணரும் திறன் மற்றும் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது.
இதனுடைய தாக்குதல் திறனை 9 கிலோ மீட்டரில் இருந்து 15 கிலோ மீட்டராக பொறியாளர்கள் நீட்டித்து உள்ளதால் இது போர் முனையில் மிகவும் திறனுள்ளதாக செயல்படுகின்றது. மேலும் போசோக் சிறிய வகை ஏவுகணைகளை பல முறை வெற்றிகரமாக சோதித்த பின் தற்போது பெருமளவில் தயாரிப்பை தொடங்கியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு 96 ஏவுகணைகளை ஏற்றுமதியும் செய்துள்ளது.