Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேள்விக்குறியாகிய சமூக இடைவெளி…. இனி இறைச்சி கடை திறக்கப்படாது… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் மார்கெட்  திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஞாயிற்றுக் கிழமை என்றாலே மக்கள் கூட்டம் அலை மோதும். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது.

இதனையடுத்து சேலம் மாநகராட்சியிலுள்ள இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட் மற்றும் சூரமங்கலம் பகுதியிலுள்ள மீன் மார்க்கெட் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடைகள் மூடப்பட்டதை அறியாத சிலர் காலையில் இறைச்சி வாங்க வந்த பின்பு கடை மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |