லீசியஸ் என்னும் இறைச்சி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் அபய் அஞ்சுரா, விவேக் குப்தா ஆகியோரால் தொடங்கப்பட்டது. பண்ணை முதல் தட்டு வரை என்ற முறையில் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளை வீடுகளுக்கு பயனர்களின் ஆடரின் பேரில் டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தை தொடங்கிய போது ஆரம்ப கட்டத்தில் நிதி ஆதாரத்திற்காக கடும் சிரமத்திற்கு உள்ளானதாக இதன் இணை நிறுவணர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர், சில முதலீட்டாளர்கள் இறைச்சி விற்பனை செய்யும் தொழிலுக்கு பதில் பன்னிர் விற்பனை செய்தால் முதலீடு செய்வதாக தெரிவித்தனர். குஜராத்தை சேர்ந்த பெரும் முதலீட்டாளர் ஒருவர் இறைச்சி விற்பனை துறையில் முதலீடு செய்ய விருப்பமில்லை என்று நேரடியாக வெளியேறினார். மேலும் இறைச்சி விற்பனை செய்யும் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்குவதற்கு நிதி அடிப்படையில் மட்டுமில்லாமல் நிர்வாக அடிப்படையில் கூட பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.