Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி டெஸ்ட் போட்டி….. இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து…. !!!

இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்ற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.

அதனைத் தொடர்ந்து 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் இன்று 5 வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ஜோ ரூட்-பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ்-ஜோரூட் சதம் அடித்து அசத்தினார். இதில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

Categories

Tech |