பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஷோ நடந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது சீசன் 4 நடந்து வருகிறது. கடந்த சீசனில் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த மாதம் கனடாவில் திடீரென உயிரிழந்தார். அது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பிறகு ஒரு மாதத்துக்கு பின் மரியநேசன் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, உடல் இறுதி தகனம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவரது இறுதி சடங்கு செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. இது லாஸ்லியா மற்றும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.