பீகார் மாநிலத்தில் 5 வயது குழந்தை இறந்த தாயின் உடலை கட்டியணைத்து உறங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பீகார் மாநிலம் பகல்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இறந்த தாயின் அருகே 5 வயது குழந்தை ஒன்று அவரை கட்டி அணைத்து தூங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஐந்து வயது குழந்தை குழந்தைகள் உதவி மையத்திற்கு அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. குழந்தை தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால் ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருந்தார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்ற விவரம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.