வெளிநாட்டில் வசித்த கணவர் ஒருவர் இறந்து போன தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க முடியாமல் தவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தை சேர்ந்த தம்பதிகள் யுப்ராஜ் – மினா. யுப்ராஜ் வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளர். மேலும் கர்ப்பிணியான அவருடைய மனைவி மினா அவர்களின் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மினாவுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஜலந்தா என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் மினா குழந்தை பிறந்த ஒரு சில நாட்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு பலியாகியுள்ளார். இது குறித்ததகவல் யுப்ராஜிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த சமயம் கொரோனா காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் எல்லையை மூடியதால் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இதனால் தன்னுடைய மனைவியை கடைசி நேரத்தில் கூட அவரால் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதையடுத்து மனைவியை இழந்து 8 மாதங்கள் ஆகிய பிறகும் தன்னுடைய குழந்தையை காணாமல் கவலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவருடன் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களின் உதவியுடன் பண உதவி பெற்று சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அங்கு காட்மண்ட் பகுதியில் மலை கிராமத்தில் சிறிய குடிசையில் வசிக்கும் தனது குழந்தை ஜலந்தாவுடன் தற்போது விடுமுறையை கழித்து வருகிறார். இருப்பினும் அவரின் மனைவி பிரிவு அவரை வாட்டியுள்ளதாக கூறியுள்ளார். மீண்டும் அவர் அடுத்த மாதம் வெளிநாடு திரும்ப உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.