பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் கிராமத்தில் காசி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தோட்டத்திற்கு சென்ற கதிரேசன் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கதிரேசன் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து அறிந்த கதிரேசனின் பாட்டி செல்லப்பா என்பவர் தனது பேரனின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாட்டி தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து பாட்டியும், பேரனும் இறந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.