கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாலையோரம் படுத்துக்கிடந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் அருகே காட்டெருமை ஒன்று இரண்டு கால்கள் முறிந்த நிலையில் படுத்து கிடந்துள்ளது. அந்த காட்டெருமை மலையில் இருந்து தவறி கீழே விழுந்ததால் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர்.
ஆனால் காட்டெருமை மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டெருமைக்கு வனத்துறையினர் மருத்துவக் குழுவினரின் உதவியோடு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..