சுனாமியில் இறந்துவிட்டதாக நினைத்த போலீசாரை 16 ஆண்டுகள் கழித்து உயிருடன் பார்த்த அவரது குடும்பம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு உலகத்தையே ஆட்டிப்படைத்த சுனாமியால் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயின. இந்த சுனாமி அலைகளானது கடலுக்கடியில் 9 – 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக உருவாகியுள்ளது. மேலும் சுனாமியால் இந்தோனேஷியாவில் சுமார் 1,67,000 உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து சரியான தகவல்களை குறிப்பிடபடவில்லை.
இந்நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த போலீஸ் அதிகாரியான அபிரிப் அசெப் என்பவரை அவரின் குடும்பத்தினர் சுனாமியில் இறந்துவிட்டதாக நினைத்துள்ளனர். ஆனால் அவர் இறக்கவில்லை, சுனாமியால் பாதிக்கப்பட்ட அவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து இறந்து போனதாக கருதிய நபரை 16 வருடங்கள் கழித்து குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.