Categories
பல்சுவை

இறந்தவர்களுக்கு மறுவாழ்வு…. எகிப்தியர்கள் உருவாக்கிய மம்மிகள்…. எப்படி தெரியுமா?.….!!!!

பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரின் உடலை பதப்படுத்தி வைத்தனர். ஏனென்றால் இறந்த பின்னரும் அவர்களுக்கு வாழ்க்கை உள்ளது என அவர்கள் நம்பினார்கள். இவ்வாறு இழந்த ஒரு உடலை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயரிடப்பட்டது. இவற்றை பாதுகாக்க பிரமிடுகள் மற்றும் சமாதிகளை அவர்கள் பயன்படுத்தினர். அவ்வாறு பதப்படுத்தி வைக்கப்பட்ட ஒரு இறந்த உடல் மம்மி என அழைக்கப்படுகிறது. மம்மியாக்கம் செய்யும் போது இறந்தவர்கள் உடலில் உள்ள இதயம் தவிர்த்து மூளை, நுரையீரல், இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுநீரகம், குடல் போன்ற உடல் பகுதிகளை நீக்கி விடுவார்கள்.

இறந்தவர்கள் உடல் மீது உப்பைக் கொட்டி 40 நாட்களுக்கு பிறகு எண்ணெயில் முக்கி எடுத்து பருத்தித் துணியைக் கொண்டு பலமுறை சுற்றுவர். பூச்சி அரிப்புக்களை தடுக்க எண்ணெய் துணி சுற்றிய உடல் மீது மூலிகை சாறுகளை பூசி விடுவார். உடலில் எடுத்த பிற பகுதிகளை தனித்தனி கேனோபிக் ஜாடிகளில் இட்டு கல்லறையில் வைப்பர். மேலும் மம்மியின் முகத்தில் பொன் அல்லது மரத்தாலான முகமூடி அணிவிப்பர். சவப்பெட்டி மீது இறந்த பார்வோன் குறித்த செய்திகளை எகிப்திய மொழியில் எழுதி வைப்பார்கள்.

Categories

Tech |