இறந்த பிறகும் இன்னும் பல ஆயிரக்கணக்கானோருக்கு பென்சன் செலுத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார் .
கடந்த மார்ச் 30ஆம் தேதி மாநிலம் வங்கியாளர்கள் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். தற்போது அந்த வீடியோவை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அரசுத் திட்டங்கள், மாநிலங்களில் தகுதியுள்ள பயனாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக தமிழக அரசு வங்கியுடன் இணக்கமாக செயல்பட விரும்புவதாக கூறினார். மேலும் நிதித்துறை மூலம் தமிழக அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே நல்ல கூட்டணியை உருவாக்க வேண்டும்.
எங்கள் முன்னெடுப்புகள் வங்கி செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கும் எனவும், வங்கி வைப்பு நிதியை உயர்த்தும் எனவும் நம்புகிறேன். அரசு திட்டங்களின் பலன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை. நிறுவனத்தை மேம்படுத்த புதிய வழிகளை கண்டறிய வேண்டும். நகை கடன் திட்டத்தில் ஆயிரக்கணக்கான முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும் குடிமைப் பதிவேட்டில் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு இன்னும் பென்ஷன் செலுத்தப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்காமல் இருந்த பல லட்சக்கணக்கான நபர்கள் rs.4000 கொடுத்தபோது வந்து வாங்கியுள்ளனர். இதெல்லாம் மிகப் பெரிய பாவமாகக் கருதுகிறேன்.தரவுகளே இனி தமது அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கப் போகின்றது” என்று தெரிவித்தார்.