இரு பெரும் மாகாணங்களை சூறாவளி தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாகாணங்களை நேற்று முன்தினம் பயங்கரமான சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் இந்த சூறாவளி நூற்றுக்கணக்கான வீடுகளை சூறையாடி உள்ளது. இதனை அடுத்து மீட்பு குழுவினர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 7000 பேர் வசிக்கும் நகரில் சூறாவளியால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாகாண அவசர மேலாண்மை துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.