Categories
தேசிய செய்திகள்

“இருவிரல் பரிசோதனை கட்டாயம் கூடாது”…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பாலியல் பலாத்காரம் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பெண் டாக்டர்கள் அந்த பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறா? என்பதை உறுதி செய்வதற்கு இருவிரல் பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த பரிசோதனை சான்றிதழை‌ முடிவாக வைத்து கோர்ட் தீர்ப்பளித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை செசன்ஸ் கோர்ட் விசாரணை செய்தது. அப்போது குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இரு விரல் சோதனை முடிவின் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பை உயர்நிதிமன்றம் மாற்றி குற்றவாளியை விடுதலை செய்தது.

அதனை தொடர்ந்து இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட் வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்தும், கோர்ட் வழங்கியும் விடுதலை தீர்ப்பை ரத்து செய்தும்‌ நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அந்த தீர்ப்பில், கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரு விரல் சோதனை நடத்தக் கூடாது. இதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். இதனை மீறி சோதனை நடத்தும் எந்த ஒரு நபரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |