திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சிலையின் முகம் சிதைக்கப்பட்டு மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிலையை துணியால் மறைத்துள்ளனர்.
திராவிட கழகத்தினர் சிலையை சேதப்படுத்திய இடத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.