இரும்பு கடாயில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இரும்புசட்டி சமையல் தாத்தா, பாட்டி கால சமையல் முறை. சரியாக பராமரித்தால்
மிக நன்மையளிப்பது,. சரியாக பராமரிக்க முடியாவிட்டால் கெடுதலே. இதன் சாதக, பாதகங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்மைகள்:
இரும்பு பாத்திரம் சூடாக தாமதமாகும். ஆனால் சூடானால் சூட்டை நன்றாக தாங்கும். உதாரணமா தோசைக்கல் சூடானால் அதில் தொடர்ந்து தோசை சுட உதவும். தோசையை பரவலாக நன்றாக சுடமுடியும். தோசை என்றால் என்னவென தெரியாத பேலியோ அன்பர்கள் இரைச்சியை உதாரணமாக கொள்ளலாம்.
இரும்புபாத்திரம் நாள்பட, நாள்பட சீசனிங் ஆகும்.பல ஆண்டு பழைய தோசைக்கல்லீலும் நன்றாக தோசை சுட முடியும். நன்றாக மெய்ன்டெய்ன் செய்யபட்ட தாத்தா/பாட்டி கால தோசைக்கல், வடைசட்டியை இன்னமும் பயன்படுத்தலாம்.
தீமைகள்:
இரும்பு சமைக்கும் உணவுடன் ரியாக்ட் செய்யும் தன்மை கொன்டது. குறிப்பாக அசிடிட்டி (புளிப்பு) நிரம்பிய தக்காளி, ஆப்பிள் சாஸ், முட்டை பொன்றவற்றை இதில் சமைக்கையில் பாத்திரத்தில் உள்ள இரும்பு உனவுடன் கலப்பது நிருபிக்கபட்ட உண்மை. அசிடிட்டி இல்லாத இரைச்சி, அரிசி, காய்கறிகள் போன்றவற்றில் இச்சிக்கல் இல்லை.
இந்திய பெண்களில் 80% பேர் அனிமியாவில் பிடிபட்டுள்ல சூழலில் இரும்பு பாத்திரத்தில் சமைப்பது அவர்களுக்கு நல்லதே. ஆனால் ஆண்களில் பலர் உடலில் போதுமான இரும்புசத்து உள்ள நிலையில் (குறிப்பாக அசைவம் சமைக்கும் ஆண்கள்), இந்த இரும்புசத்து கூடுதலாக உடலில் சேரும். உடலில் கூடுதலாக சேரும் இரும்பை அகற்ற ஒரே வழி ரத்ததானம் செய்வதே. ஆக இந்த ஒரு சிக்கல் மட்டுமே இதில் உண்டு. வருடம் ஒரு முறை ஆண்கள் ரத்ததானம் செய்துவிட்டால் அப்பிரச்சனைக்கு எளிதான தீர்வு கிட்டிவிடும்.
ஆக இரும்பு பாத்திரத்தை நன்றாக மெய்ன்டெய்ன் செய்வது அவசியம் ஆகிறது. பாத்திரத்தை பழக்க, புதிதாக வாங்கின இரும்பு பாத்திரத்தின் மேல் நல்லெண்ணெய், சூரியகாந்தி, ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் என ஏதோ ஒரு எண்னெயை தடவி அதை அவனில் 350 டிகீ பாரந்கீட்டில் 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை வைக்கவும். புகை வந்தவுடன் டக் என நிறுத்திவிடவும்.
பேலியோ அல்லாத எண்னெயாக இருப்பினும் கவலையில்லை. ஏனெனில் இந்த எண்ணெய் வெறும் கோட்டிங்குக்கு மட்டும்தான். இது இரும்புபாத்திரத்தின் உள்ளே இறங்கி அதன் உள்ளே உள்ல சிறு துளைகளை அடைத்து அதை நாந் ஸ்டிக் வெரைட்டி ஆக்கிவிடும். இதை polymerization என்பார்கள். இப்படி ஆன பாத்திரம் அதன்பின் சமைக்க மிக ஏற்றது. அதில் சுடப்படும் தோசை, இரைச்சி, எல்லாம் அதன்பின் கொஞ்சமாக எண்ணெய் விட்டாலும் கல்லில் ஒட்டாது.
கல்லை சோப்புபோட்டு கழுவினால் சீசனிங் போய்விடும். அதை டிஷ் வாஷரிலும் போட கூடாது. ஆக கல்லை சோப்பு போட்டு கழுவும் அளவு அதில் கரைகள், வாசம் வராமல் இருந்தால் அதை கழுவும் அவசியமில்லை. அதிக கரை, வாசம் இருந்தால் சோப்பு போட்டு கழுவி மறுபடி சீசனிங் செய்யவேண்டும். அல்லது கழுவி துடைத்து தேங்காய் எண்ணெயை மேலே தடவி வெயிலில் வைத்துவிடலாம்.
தக்காளி, ஆப்பிள்சாஸ், புளி, வினிகர், ஒயின், லெமென் சேர்த்து சமைக்கும் உணவுகளை புதிதாக வாங்கிய இரும்பு பாத்திரத்தில் சமைக்ககூடாது. சமைத்தால் இரும்பு உடலில் சேரும் என்பதுடன் பாத்திரமும் கெடும். நாட்பட, நாட்பட பழக்கபட்ட பாத்திரத்தில் ஆயில் கோட்டிங் அதிகமானபின் அதில் அச்சிக்கல் இல்லை.
இத்தனை சிக்கல் வேண்டாம் என நினைத்தால் தாத்தா, பாட்டியிடம் கெஞ்சி கூத்தாடி அவர்கள் வைத்துள்ல இரும்பு வாணலி, தோசைக்கல்லை சுட்டுகொன்டு வந்துவிடுங்கள் அல்லது ஊரில் குயவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தேடிகண்டுபிடித்து மண்சட்டி சமையலுக்கு மாறுங்கள்.