இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் தொண்டர்கள் அனைவரும் இந்திரா காந்தியின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.