Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடைய தகராறு…. சிதைந்து போன உடல்…. போலீஸ் விசாரணை…!!

இறுதி சடங்கின் போது திடீரென தகராறு ஏற்பட்டதால் இறந்தவரின் உடல் சிதைந்துள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தொட்டி குப்பம் என்ற பகுதியில் செல்வ முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நிலை குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இதனையடுத்து செல்வகுமாரின் உடல் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு  உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் செல்வகுமார் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டி உடைந்து  அவரது உடல் சிதைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் எண்ணூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்த தகராறில் படுகாயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட இருதரப்பினரும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பாலசந்தர், அஜித்குமார், குமரேசன், நவீன், சுதாகர், சதீஷ், ராம்குமார், விஜய் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |