இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வடகரையாத்தூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொல்லிமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நாமக்கல் வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருத்த போது முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக விஸ்வநாதன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நல்லிபாளையம் காவல்துறையினர் விஸ்வநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது மனைவி சுகந்தி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.