Categories
மாநில செய்திகள்

இருங்கப்பா… பொருங்கப்பா… சும்மா…! “மேடையில் கடும் கோபமடைந்த இபிஎஸ்”….. பெரும் பரபரப்பு…..!!!

இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த  ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறினார். அவர் வெளியேறியதை தொடர்ந்து இபிஎஸ் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும்போது மாவட்ட செயலாளர் ஒருவர் மிகப்பெரிய மாலையை அணிவிக்க வந்தார். அப்போது கடும் கோபமடைந்த இபிஎஸ் இருங்கப்பா… பொருங்கப்பா… சும்மா… என்று தனது கடுப்பை வெளிப்படுத்தினார்.

Categories

Tech |