Categories
உலக செய்திகள்

“இருக்கும் காலம் வரை நேசித்து வாழ்வோம்!”.. 78 வயது தாத்தாவை திருமணம் செய்த இளம்பெண்..!!

அமெரிக்காவில் 78 வயது முதியவர் 28 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த நிலையில் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி கூறியுள்ளனர். 

அமெரிக்காவில் வசிக்கும் 78 வயது நபர் Guy. இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன் காலமானார். அதன்பின்பு இவர் யோகா வகுப்பில் சேர்ந்துள்ளார். அப்போது 28 வயதான Kelsey என்ற இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு இருவரும் காதலித்துள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து சுமார் 50 வயது வித்தியாசம் கொண்ட இருவரும் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். இதுகுறித்து Kelsey தெரிவித்துள்ளதாவது, கண்டதும் எங்களுக்குள் காதல் மலரவில்லை. இருவரும் பேசி பழகிய பின்பே, மனதால் ஒன்றிணைந்தோம். எங்கள் காதல் பற்றி நான் முதலில் யாரிடமும் கூறவில்லை.

எங்களை பார்த்தவுடன் அனைவருமே, Guy ஐ பராமரித்துக் கொள்ளும் பெண் என்று தான் கருதுகிறார்கள். அவருக்கு வயது அதிகமாக இருப்பதால், அவரை இழந்து விடுவேன் என்ற அச்சமும் இருக்கிறது. ஆனால் இறப்பு என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. எனவே அதுவரை அதை எண்ணி வருந்தக்கூடாது என்று உணர்ந்திருக்கிறேன். எனவே இருக்கும் காலம் வரை ஒருவரை ஒருவர் அதிக காதலுடன் நேசித்து வாழ்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |