Categories
அரசியல்

இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்…. ஓபிஎஸ் செய்யும் துரோகம்…. போட்டு தாக்கிய கி.வீரமணி…!!!

திராவிட கழகத் தலைவர் கி. வீரமணியின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக. ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன் எ. வா. வேலு, நேரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது அண்ணாவுக்கு செய்யும் பெரும் துரோகம் என்று கூறியுள்ளார். அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு இனியும் அண்ணாவுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்.

தொடர்ந்து தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்று கலைஞர் அறிவித்ததை எதிர்த்து வீம்புக்கு ஜெயலலிதா மாற்றினார். அதே தவறை அதிமுகவினர் இப்போதும் செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போய்விடுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் பிறந்தநாளை முன்னிட்டு 5 செயல் திட்டங்களை அறிவித்த கி.வீரமணி, சாதி ஒழிப்பு பணிக்காகவே தனது மீதமுள்ள வாழ்நாளை கழிக்க போவதாக கூறினார். மேலும் திமுக அரசுக்கு அரணாக இருப்பதுடன் ஆணவக் கொலைகளை தடுக்கவும் நீட்தேர்வு ஒழிக்கவும் சட்டரீதியான தீர்வுகளை நோக்கி செயல்பட போவதாக கி. வீரமணி கூறியுள்ளார்.

Categories

Tech |