Categories
சினிமா தமிழ் சினிமா

இருக்கிற பிரச்சனைல இது வேறையா….? “கொஞ்ச நாள் எனக்கு போன் பண்ணாத”….  ஸ்டிட்டா சொன்ன தனுஷ்….!!!

நடிகர் தனுஷ்க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகை ஒருவர் ஆறுதல் அளித்து வருகிறாராம்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் கடந்த மாதம் விவாகரத்து செய்துகொள்ளும் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்கள். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாததால் சிலர் இஷ்டத்திற்கு ஒரு காரணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் கஸ்தூரிராஜா ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் சில நடிகைகளுடன் நெருங்கி பழகுவதே இவர்களின் விவாகரத்திற்கு காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது சமூக வலைதளங்களில் தனுஷின் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தில் நடித்த நடிகை ஒருவர், தனுசை தொடர்ந்து  தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறாராம். மேலும் அந்த நடிகையின் விவாகரத்திற்கு தனுஷும் ஒரு காரணம் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையிலும் அவர் தனுஷிடம் நெருக்கம் காட்டுவதை விட்டுவிட இல்லையாம். தற்போது தனுஷுக்கு  விவாகரத்து ஆனதால் அவருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போன் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தனுஷ் அந்த நடிகையிடம் இருந்து போன் வந்தாலே பதறி விடுகிறாராம். ஏனென்றால் ஏற்கனவே பல பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இது வேறு புது பிரச்சினையா என்று எண்ணி பிரச்சினைகளிலிருந்து தன்னை திசை திருப்பும் வகையில் திரைப்படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |