ஜனவரி 26-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருக்கும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி திமுக எம்பி கூட்டம் நடைபெற இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஜனவரி 26 திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
