தமிழகத்திலிருந்து காவலர்களுக்கு படியாக 300 ரூபாய் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இரவு ரோந்து காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை படியாக மாதம் 300 ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவர் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் இரவு ரோந்து பணி மேற்கொள் ளும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ் வழங்கப்படும்.
இதற்காக தமிழக அரசுக்கு 42,00,22,800 ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. இது ஓரிரு மாதத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பில் காவலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.