கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. பகலில் வெயில் பாட்டி வதைத்த நிலையில் இரவில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Categories
இரவு முழுவதும் பெய்த சாரல் மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
