Categories
தேசிய செய்திகள்

இரவு முழுவதும் ஒரே பகுதியில்…. சுற்றி சுற்றி வந்த கார்…. ரூமுக்குள் 19 வயது பெண் மயக்கம்…. திடுக்கிடும் சம்பவம்…!!!

கேரள மாநில காசர்கோடு பகுதியில் வசித்து வந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டின் கதவானது நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது மாடல் அழகியின் உடல் முழுவதும் காயங்களோடு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் அவருடைய மூன்று ஆண் நண்பர்கள் சேர்ந்து 19 வயது பெண்ணை இரவு பார்ட்டிக்கு அழைத்துள்ளார்கள். பின் ராஜஸ்தான் பெண்ணின் உதவியுடன் அந்த மூன்று இளைஞர்கள் இரவு முழுவதும் இளம்பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் மயக்கம் அடைந்த அவரை அறையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |