தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு பள்ளியில் இன்று முதல் தடுப்பூசி போடப்படுவது நேற்று இரவு முதல் வரிசையில் இடம்பிடித்த பொது மக்கள் காத்துக்கிடக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்களிடம் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம். கட்டாயம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.