ஜேர்மன் நீதிமன்றம் இரவு நேர ஊரடங்கு தளர்த்த வேண்டும் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் ஊரடங்கு அவசியம் என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ஜெர்மனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 23 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் கட்சி ஒன்று மக்களுக்கு சுதந்திரம் இல்லாமல் வீட்டுக்குள் அடைத்து வைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என வழக்கு தொடுத்தது.
இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் இரவு நேர உடல் அமலில் உள்ளது நோயின் பாதிப்பை தடுக்க உதவும் என்றும் இந்த கொரோனா கட்டுப்பாடு சட்டத்திற்கு புறம்பானது இல்லை எனவும் கூறியது. மேலும் உயிரை பாதுகாப்பதே சுகாதார அமைப்பின் முக்கிய கடமையாகும் எனவே அதன் விதிமுறைப்படி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது சரியானது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.