நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்தது வந்ததன் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்தாலும் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இரவு 10 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறவேண்டும் என்று வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்வது குறித்து நிபுணர்களுடன் அரசு ஆலோசித்தது. இதனைத்தொடர்ந்து இரவு நேர ஊரடங்கை ரத்து செய்த மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.