நிவர் ஏற்கனவே மாலை கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் கடலில் அதன் தீவிரத் தன்மையை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்றே வடமேற்கு திசையை நோக்கி பயணித்து அதன் பிறகு கரையை கிடக்கின்றது. இதனால் தற்போது இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயலானது தற்போதைய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புயல் எனது தீவிர புயலாக நிலை கொண்டிருக்கின்றது.
மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. கடலூருக்கு 300 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில், புதுவையிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவிலும் நிவர் புயல் தற்போது நிலைகொண்டுள்ளது. இது தீவிர புயலாக அடுத்து வரக்கூடிய 12 மணி நேரத்தில், அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி அடுத்த ஆறு மணி நேரத்துக்கு நகரும், அதற்கு பிறகு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று இரவு கரையை கடக்க கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாகவே கரையை கடக்க கூடும் என்பதன் காரணமாக 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு 360 கிலோ மீட்டர் அருகில் வந்துவிட்டது. 700 கிலோ மீட்டருக்கு அதிகமான தொலைவிலிருக்கும் தென்கிழக்கு திசையில் இருக்கும் போது திசை மாறிய புயல் இனி திசை மாற வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.