உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கருப்பையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இபுராஹீம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகில்தகம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் 1 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொண்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜிடம் ஒப்படைத்துள்ளனர்.