Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரவில் வீட்டிற்கு சென்றவர்களுக்கு… காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கரூர் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 28-ஆம் தேதி ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். அதன்பின் டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் காலையில் திறக்க வந்த போது கடையில் உள்ள மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் டாஸ்மாக் கடையின் உள்ளே சென்ற பார்த்த போது அங்கு மது பாட்டில்கள் மற்றும் ரூ. 6000 பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

மேலும் லாக்கரில் இருந்த பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதையடுத்து காவல்துறையினர் கடையின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முககவசம் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் செல்லும் காட்சி இரவு 11.40 மணி அளவில் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியை கொண்டு டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |