பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை-அரும்பாவூர் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த 28-ஆம் தேதி அன்று விற்பனையாளர் மாதேஸ்வரன் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டப்பட்டிருந்த கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு மது பாட்டில்கள் மற்றும் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விற்பனையாளர் மாதேஸ்வரன், டாஸ்மாக் மேற்பார்வையாளர் மார்க்கண்டேயனுக்கு தகவல் அளித்துள்ளார். அவர் அரும்பாவூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.