இரவின் நிழல் படத்தை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியதாக பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். மேலும் சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் இந்த படம் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சிங்கிள் ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இரவின் நிழல் படத்தை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியதாக பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான்.”இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக pic.twitter.com/Y9xvBmYOra
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 23, 2021
அதில் ‘இரவின் நிழல்-இன்று இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான். இது சிங்கிள் ஷாட்டில் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும், உதாரண படமாகவும் இருக்கும் என்று பாராட்டி கீ-போர்டில் விரல் ஓட்டினார். வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக’ என பதிவிட்டுள்ளார். இதனிடையே அபிஷேக் பச்சன் நடிப்பில் ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் பார்த்திபன் இயக்கி முடித்துள்ளார்.