Categories
உலக செய்திகள்

இரத்த வெள்ளத்தில் கிடத்த தாய்…! எதுவுமே தெரியாமல் குழந்தை கேட்ட கேள்வி… நெஞ்சை உலுக்கிய சோக சம்பவம் …!!

பெல்ஜியத்தில் தன் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 27 வயதான பெண் இவருக்கு இரண்டு பிள்ளைகள இருந்த நிலையில் தன் முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நடக்கும்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4வயது இளைய மகளுக்கு அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் போலீசாரிடம் அம்மாவின் உடலில் ஏன் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது? என்று கேட்ட செயல் மனதை பதைபதைக்க வைக்கிறது.

அப்போது 6வயதான மூத்த  குழந்தை நடந்த சம்பவத்தை பற்றி போலீசாரிடம் கூறுகையில் தன் அம்மாவை சந்திக்க யோல்டஷ் என்பவர் வந்துள்ளதாகவும், அவர் தன்னை கூப்பிடும் வரை அறைக்குள் வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.பின் அவர் வீட்டை விட்டு போகும் போது தன் அம்மா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டதாகவும் அந்த சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடப்பதற்கு முன் யோல்டஷ்  தமது மொபைலில் நான்கு காணொளிகளை பதிவு செய்திருக்கிறார். பதிவு செய்ததில் இன்னும் சில மணி நேரத்தில் மூவர் கொல்லப்பட இருக்கிறார் என்று இருந்தது. இது தன்னுடைய தவறு இல்லை என்றும் தமது தந்தை உள்ளிட்டவர்கள் தம்மை  மன்னிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த கொலை செய்ததற்கு முதல் காரணம் தன் காதலி எலினோர் 60 வயதான ஒரு நபருடன் தொடர்புடையது தான் என்று யோல்டஷ் கூறியுள்ளார்.

Categories

Tech |