Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்கள் விடுமுறை… மொத்தமா வாங்கிட்டு போணும்… சாக்கு பையுடன் குவிந்த மது பிரியர்கள்..!!

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரண்டு நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மது ரகங்களை சாக்குப்பையில் மொத்தமாக வாங்கி சென்றனர்.

தமிழகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும், இரவு நேர முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மது கடைகளுக்கு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் நேற்று மாலையில் மது பிரியர்கள அலை மோதினர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளத்தூர், கழனிவாசல், கானாடுகாத்தான், சாக்கோட்டை, புதுவயல், கோட்டையூர், மானகிரி, கோவிலூர் ஆகிய பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் நேற்று வழக்கம் போல் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்ட போது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கூட்டம் இருந்தது.

அதன் பின்னர் சமூக இடைவெளியுடன் நிற்க அறிவுறுத்தப்பட்டது கடை ஊழியர்கள் மதுபாட்டில்களை வழங்கினர். அதில் இரண்டு நாட்கள் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவதால் மது பிரியர்கள் கூடை பை, சிறிய சாக்கு பை, கை பை ஆகியவைகளைக் கொண்டு வந்து தங்களுக்கு பிடித்தமான மது ரகங்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.

Categories

Tech |