Categories
தேசிய செய்திகள்

இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்று…. “இது கடவுளின் அவதாரம்” வழிபாடு செய்யும் பொதுமக்கள்….!!

ஒடிசா மாநிலத்தில் விவசாயி ஒருவரின் பசு மூன்று தலைகளுடன் கன்றுக்குட்டியை ஈன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் நப்ரங்கூர் மாவட்டம் பீஜப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனி ராம். விவசாயியான இவர் தனது வீட்டில் பசு ஒன்றை வளர்த்து வந்துள்ளார் . அந்த பசு நவராத்திரி தினத்தில் கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்று இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் பிறந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனி ராம் அந்த பசுவை வாங்கியுள்ளார். பசு சமீபத்தில் கர்ப்பம் அடைந்தது. பின்பு பிரசவம் ஏற்படும் சமயத்தில் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. தொடர்ந்து பசுவை சோதித்த டாக்டர்கள் கன்று இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் இருப்பதை கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தனி ராம் கூறுகையில்,” இரு தலைகளுடன் பிறந்ததால் கன்றுக்குட்டி தாயிடம் பால் குடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வெளியில் பால் வாங்கி கொடுத்து வருகிறோம் என்று கூறினார். நவராத்திரி தினத்தில் இந்த கன்று குட்டி பிறந்துள்ளதால் இதனை கடவுள் துர்கா தேவியின் அவதாரமாக நினைத்து வழிபட தொடங்கியுள்ளனர்.” மேலும் இந்த கன்றுகுட்டி தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Categories

Tech |