தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் படம் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் வெற்றி படமான கோடியில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படம் கடந்த வருட செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வலம் வருவதால் இப்படத்தை எதிர்பார்த்து இருப்பதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.