Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல சீரியல் நடிகை….. யாரோடு தெரியுமா….? லீக்கான தகவல்…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முதல் பாகம் 2018 ஆம் வருடம் ஒளிபரப்பானது. இதனையடுத்து தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. இந்த தொடரில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிகை தீபா நடித்திருக்கிறார். இவர் ரெக்க கட்டி பறக்குது மனசு பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது தீபா சன் தொலைக்காட்சியில் பிரியமான தோழி உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தீபா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இதனையடுத்து தற்போது நடிகை தீபா ஷாய் கணேஷ் பாபுவை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. சாய் கணேஷ் பாபு உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மை லவ் பாபு என்று குறிப்பிட்டுள்ளார். இவர் வீடியோ எடிட்டராக இருக்கிறார். இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை இவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |