உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை எடுப்பு ஒரு மாத காலத்தை தாண்டிய நிலையில் தற்போது அது இரண்டாவது கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யப் படைகள் கீவ் நகரை கடந்து தற்போது உக்ரைன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு ரஷ்ய வீரர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய துப்பாக்கிகளை தற்போது உபயோகப்படுத்துவதாகவும் ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. மூன்று நாட்களில் போரை முடித்து விடலாம் என அனுப்பப்பட்ட ரஷ்ய வீரர்கள் ஒரு மாத காலத்தை கடந்தும் போர் செய்து வருவதால் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் சரிவர கிடைக்கவில்லை எனவும், இதனால் ரஷ்ய வீரர்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
அதோடு ரஷ்ய வீரர்கள் பலருக்கு சரியான போர் பயிற்சி அளிக்கப்படவில்லை எனவும், பசியால் வாடும் ரஷ்ய வீரர்கள் குளத்தில் தேங்கியிருக்கும் நீரை குடித்து தங்கள் பசியைப் போக்கிக் கொள்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. நடந்து வரும் ரஷ்ய உக்ரைன் போரில் கிட்டத்தட்ட 20000 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டு விட்டனர். ஆனாலும் ரஷ்யா தனது பெரும்பான்மையை நிரூபிக்க 60000 வீரர்களை களமிறங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது.