கேரள மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கில் விஸ்வநாத் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயல் என்ற பகுதியை சேர்ந்த உமர் மற்றும் பாத்திமா இருவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் வெலமுண்ட் உள்ள புரிஞ்சியல்வயல் என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அப்போது திருமணமான சில நாட்களில் உமர் பாத்திமா இருவரும் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி தம்பதியர் தங்கள் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விசாரணையில் கோழிக்கோட்டை சேர்ந்த கொலுங்கொட்டுமால் விஷ்வநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகை பணத்திற்காக உமர் பாத்திமா தங்கியிருந்த வீட்டிற்கு இரவு சென்ற கொள்ளையன் விஷ்வநாத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தம்பதியர் விழித்துக் கொண்டதால் அவர்கள் இருவரையும் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த கொலை தொடர்பாக மாவட்ட கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததுள்ளது. தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பு வெளியானது. இந்த இரட்டை கொலை வழக்கில் விஷ்வநாத் தான் குற்றவாளி என உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளி விஷ்வநாத்திற்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.