Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தை விவகாரம்: நயன்தாரா இதையெல்லாம் பாலோவ் பண்ணாங்களா?…. ஆலோசனையில் அதிகாரிகள்….!!!!

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அவ்வாறு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எளிதான காரியம் இல்லை. பல கட்டுப்பாடுகளையும் அதற்குரிய சட்டத்தையும் சென்ற வருடம் மத்திய அரசு கொண்டுவந்தது. எந்த சூழ்நிலையில் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றிய விவரத்தை பார்ப்போம். அதாவது,

# திருமணம் ஆன பெண்ணுக்கு கர்ப்பப் பை இல்லாமல் இருந்தால்.

# கர்ப்பப்பை வளர்ச்சியடையாமல் இருந்தால்.

# கேன்சர் போன்ற நோய்களால் கர்ப்பப் பை அகற்றப்பட்டு இருந்தால்.

# தெரியாத காரணங்களால் கரு பல முறை தங்காத சூழ்நிலை.

# இயற்கையாகவே கருதங்கும் தன்மை இன்றி பலமுறை கலைந்துபோதல்.

# கருவை சுமந்தால் உயிருக்கு ஆபத்து நிகழலாம் என உறுதிப்படுத்தப்பட்டால்.

இதுபோன்ற ஏதாவது காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகை தாயை நாடமுடியும். இந்த சிகிச்சையளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனை மத்திய அரசின் பிரத்தியேக கவுன்சிலில் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்கவும். அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் நிபுணர், கருவை 56 தினங்கள் வரை வெளியில் வைத்து பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ நிபுணர், ஒரு கவுன்சிலர் போன்றோர் கட்டாயம் இருக்க வேண்டும். வாடகை தாய்க்கு 36 மாதங்களுக்கு மருத்துவகாப்பீடு கட்டாயம் எடுத்து இருக்க வேண்டும்.

56 நாட்கள் உருவான கருவை வாடகை தாயின் கர்ப்பப் பைக்குள் ஒருமுறை மட்டுமே செலுத்தவேண்டும். இச்சட்டத்தை மீறும் தம்பதிக்கு 5 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூபாய்.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாடகை தாயை கண்காணித்து வரக்கூடிய மருத்துவமனைகள் கரு உருவான முதல் மாதத்தில் இருந்தே ஒவ்வொரு மாதமும் பரிசோதித்து வரவேண்டும். அதற்கென “பிக்மி’ வரிசை எண்ணும் வழங்கவேண்டும். இந்த எண் இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்கூட பெற இயலும்.

இவ்வளவு நடைமுறை இருக்கும் போது அதையெல்லாம் நயன்தாரா முறையாக கடைபிடித்தாரா..? எனும் சந்தேகம் எழுந்திருக்கிறது. திருமணம் முடிந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சிகிச்சை, சோதனைகள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்ற பின்பே வாடகைத் தாய் முறைக்கு போகவேண்டும். ஆனால் நயன்தாரா விவகாரத்தில் திருமணத்துக்கு முன்பே வாடகைத் தாயிடம் கரு வளர்க்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இது விதிமீறல் செயல் என பலரும் பேசிவருகின்றனர்.

இப்பிரச்சினை சர்ச்சையானதும் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது நயன்தாராவிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். அதன்பின் மருத்துவத்துறை அதிகாரிகள் உடனே களத்தில் இறங்கி விசாரணை நடத்தினர். தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனையில் தான் வாடகைதாய் குழந்தை பெற்றுள்ளார். அந்த மருத்துவமனை வாடகை தாயின் பெயர் விபரங்கள், சிகிச்சையளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்தனர்.

அதை ரகசியமாக வைத்துள்ள அதிகாரிகள் விபரங்களை வெளியிட மறுத்து விட்டனர். இதனிடையில் நயன்தாரா விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டு இருக்கிறதா? என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதிக்க மருத்துவதுறை உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டிஎம்எஸ்-சில் இன்று நடந்தது. இவற்றில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பங்கேற்றார். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

Categories

Tech |