திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றால் 10 மாதங்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகள், மருத்துவ சான்றிதழ்கள் உள்ளிட்ட பல விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நயன்-விக்கி ஜோடிக்கு திருமணம் முடிந்த 4 மாதங்களே ஆகியுள்ளதால், திருமணத்திற்கு முன்பே அவர்கள் இதை ஏற்பாடு செய்துவிட்டார்களா, அப்படி செய்திருந்தால் அது சட்டப்படி குற்றம், என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை திருமணத்தை ஒரு ஆண்டிற்கு முன்பே பதிவு செய்திருப்பார்களோ?