Categories
மாநில செய்திகள்

இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க… வாக்குச்சாவடி அலுவலர் மீது புகார்… இடமாற்றம்…!!!

திருமங்கலம் தொகுதி வாக்குச் சாவடியில் உள்ள அலுவலர் மீது புகார் எழுந்ததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமங்கலம் தொகுதி காட்ராம்பட்டி வாக்குச்சாவடியில், வாக்களிக்க வரும் பெண்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதாக வாக்குச்சாவடி அலுவலருடன் அமமுக, திமுக வேட்பாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பெண் அலுவலரான சௌந்தர்யா மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவரை இடமாற்றம் செய்து விட்டு புதிய அலுவலரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Categories

Tech |