Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இயற்கை ஒத்துழைத்தும் சாகுபடிக்கு வழியில்லை…!!

திருச்சியில் 15 நாட்களில் சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் கையில் பணம் இன்றி தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சம்பா சாகுபடி விவசாயத்தை பெரிதும் நம்பியிருக்கும் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சாகுபடி சிறப்பாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் போதியளவு நீர் வரத்து, நெல்மணிகள் கையிருப்பு என அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும், ஊரடங்கால் சம்பா சாகுபடி செய்வதற்கு தேவையான பணம் கையில் இல்லை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஏக்கர் சம்பா சாகுபடிக்கு தேவையான 40,000 ரூபாய் பணம் இல்லாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் தமிழக அரசு இந்த ஆண்டு சாகுபடி செய்வதற்கு கடன் வழங்கி, தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Categories

Tech |