இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க அந்த கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்த 22 வயது இளைஞன் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து விட்டு பின்னர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.